அஜித்தின் ரீல் மகள் “அனிகா” கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் புதிய தமிழ் படம் – வெளிவந்த போஸ்டர்.!

anikha-
anikha-

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் தமிழ்த்திரை பக்கம் திசை திரும்பியவர் நடிகை அனிகா. முதலில் அஜித், அருண்விஜய் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரை படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அஜித்தின் மனதில் இடம் பிடித்தார்.

சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் அஜித்தின் உடன் விஸ்வாசம் திரைப்படத்தில் மகளாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்  இப்பொழுது இவர் படங்களில் ஒரு பக்கம் நடித்து வந்தாலும் மறுபக்கம் நடிகை அனிகா சினிமாவுலகில் உச்ச நட்சத்திர நடிகைகள் எப்படி கிளாமரில் ருத்ரதாண்டவம் ஆடுவார்களோ..

அதே போல இவரும் தொடர்ந்து அனிகாவும் மாடர்ன் உடையில் தனது அழகை சூப்பராக காண்பித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு அசத்துகிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இது இப்படி போய்க்கொண்டு இருக்க.. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை அனிகா தமிழ் பக்கத்தில் வந்து ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

அந்தப் படம் தான் வாசுவின் கர்ப்பிணிகள். நீயா நானா கோபிநாத், வனிதா போன்றவர்களுடன் இணைந்து அனிகாவும் நடித்துள்ளார் இதில் 16 வயது முதல் 52 வயது இருக்கும் 4 பெண்கள் மற்றும் ஒரு டாக்டர் ஆகியோர் சுற்றி தான் இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை அனிகா 16 வயதிலேயே கர்ப்பமான பெண்ணாக இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை..