கமலை பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்க.. கோபத்தில் வார்த்தையை விட்ட தாடி பாலாஜி மனைவி – வைரலாகும் வீடியோ

சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் சற்று வித்தியாசமாக மீடியா பிரபலங்கள் சிலரை வைத்து ஒரு வீட்டில் எந்த கனெக்ஷனும் இல்லாமல் பிக் பாஸின் கண்ட்ரோலில் 100 நாட்களை கடந்து இருந்து வந்தனர். அப்படி முதல் சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இதுவரை பிக்பாஸ் ஐந்து சீசன்கள் வரை சிறப்பாக முடிவடைந்தும் உள்ளது.

இந்த ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட சில பிரபலங்களை வைத்து தற்போது ஓடிடி தளத்திலும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதில் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருவர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா.

இவர்கள் இருவரும் வெளியில் சில பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டிலும் ஆரம்பத்தில் இவர்கள் பேசாமல் இருந்து வந்த நிலையில் கடைசி நாளில் இவர்கள் இருவரையும் கமல் சேர்த்து வைத்தது போல் காட்டப்பட்டன. ஆனால் வெளியில் வந்தும் இவர்கள் பிரச்சனை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

இந்த நிலையில் தாடி பாலாஜி தனது மகள் போஷிகாவை நித்தியா ரீல்ஸ் விடியோ செய்ய வைத்து தவறாக வழிநடத்துகிறார். இதனால் போஷிகா வின் படிப்பும் பாதிக்கப்படுகிறது என சொல்லி பாலாஜி புகார் அளித்துள்ளார். மேலும் குழந்தையை மீட்டுத் தரும்படியும் கேட்டுள்ளார். இதுகுறித்து நித்யாவிடம் விசாரிப்பதற்காக நிருபர் ஒருவர் நித்யாவுக்கு போன் செய்து பேசியபோது..

‘நித்தியா ஒழுங்கான பதில் ஏதும் கூறாமல் பாலாஜி போல் மீடியாவிற்கு எல்லாம் என்னால் வர முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் கமல் குறித்து கேட்டதற்கும் கமல் போல ஒரு ஒஸ்ட் கேரக்டரை நான் பார்த்ததே இல்லை அவரை பற்றி பேசினால் நிறைய கண்டெண்ட் வெளியில் வரும் எனவும் அவரை பற்றியும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

Leave a Comment