Actor yogi Babu: தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் யோகி பாபு. காமெடி நடிகராக நடித்து வந்த யோகி பாபு ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருகிறார்.
சூரி, சந்தானம் போன்ற நடிகர்கள் காமெடியில் கலக்கி வந்த நிலையில் தற்போது இவர்களும் சீரியஸான ரோலில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டனர். எனவே தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக தற்பொழுது யோகி பாபு தான் இருந்து வருகிறார். எனவே சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் யோகி பாபு நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் யோகி பாபு லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளார். இவருடைய தோற்றம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும் காமெடியில் கலக்கி வருகிறார். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல படங்களில் ரௌடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தான் நகைச்சுவை கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன் படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்காக லேடி கெட்டப் போட்டு அந்த பட கதையின் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.
இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகர் மாதம்பட்டி ரெங்கராஜ் நடித்துள்ளார். ஆங்கிலோ இந்தியன் படத்தில் லேடி கெட்டப்பில் நடித்திருக்கும் யோகிக்கு மிஸ் மேகி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை செல்வராகவனின் உதவியாளர் லதா என்பவர் இயக்க, டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.