சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டும் தான் முதல் படமே மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை பெற்றுத்தரும். அவ்வளவு எளிதாக யாரும் சினிமாவில் தங்களது கால்தடத்தை நிலைநாட்டிட முடியாது. அந்த வகையில் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவிற்கு பேசபட்டவராக வலம் வந்தவர் அங்காடித்தெரு மகேஷ்.
இதற்கு முற்றிலும் காரணமாக அமைந்தது இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்ததாள் ரசிகர்களை கவர்ந்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதையும் நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை கூறியதால் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இருந்த பாடல்களும் ரசிகர்களை இன்னும் முணு முனுக்க வைப்பது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய அளவில் ஓடி ஹிட்டடித்தது. திரைப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலி தற்போது முன்னணி நடிகையாக தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் நடிகர் மகேஷ் இந்த திரைப்படத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறலாம். அதாவது இந்த திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இவரை பல இயக்குனர்கள் மற்றும் நடிகைகளின் தாயார் இவரை தொந்தரவு செய்து 50 லட்சம் சம்பளம் என பணத்தாசை காட்டி வயது மூத்த நடிகையுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தனார்.
தன்னைவிட மூத்த நடிகையுடன் நடித்ததால் படம் வெற்றி பெறாமல் போனது. பார்ப்பதற்கு ஹீரோ ஹீரோயின் போல் இல்லாமல் அம்மா பையன் போல் இருந்ததால் படம் படுமோசமாக தோல்வியடைந்தது.
இப்படி படத்தின் கதையை தேர்வு செய்யாமல் சம்பளம் அதிகமாக கொடுத்த காரணத்தால் படத்தில் நடித்து தனது சினிமா வாய்ப்பை இழந்து தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். என்னதான் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே அவரது வருத்தமாக உள்ளது.