நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது, அதனைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித்தேரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டச்சுழி தூங்காநகரம், மகாராஜா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்பு ஒரு காலகட்டத்தில் நடிகர் ஜெய் என்பவருடன் காதல் கிசுகிசு பேசப்பட்டது ஆனால் இதுகுறித்து அஞ்சலி மற்றும் ஜெய்யிடம் கேட்கும்போது மௌனம் காத்து வந்தார்கள், அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒரு சில காரணங்களால் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அஞ்சலிக்கு தமிழ் சினிமாவில் மிக முக்கிய திரைப்படமாக கருதப்படுவது அங்காடி தெரு, இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜவுளிக்கடையை மையமாக வைத்து கதை உருவாகியிருக்கும், சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் வறுமையான கிராமத்து இளைஞர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கும்.
திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனகளை பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது ஆனால் இந்த திரைப்படத்தை முதன் முதலில் நடிக்க இறந்தது அஞ்சலி கிடையாதாம், முதன்முதலில் வேற ஒரு பெண்ணை தான் நடிக்க வைக்க படக்குழுவை தேர்வு செய்தார்கள்.
அது வேற யாரும் இல்லை இதே திரைப்படத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து இறந்துவிடும் காட்சிகளில் நடித்த பெண் தான் முதலில் இந்த திரைப்படத்தில் நடிகையாக நடிக்க இருந்ததாம். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் அஞ்சலிக்கு மாறியது. அஞ்சலி இந்த திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.