உலக சினிமாவில் பல திரைப்படங்கள் ஒரு நடிகர் நடிக்க இருந்து பின்பு வேறொரு நடிகர் நடித்து ஹிட் அடித்த திரைப்படங்கள் பல இருக்கின்றன அதிலும் தமிழில் சொல்லவே வேண்டாம் பல திரைப்படங்களில் ஒரு நடிகர் நடிக்க இருந்து மற்றொரு நடிகர் நடித்துள்ளார்கள்.
அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் ஏதோ ஒரு காரணத்தால் நல்ல கதைகளை விட்டுவிட்டு அதன் பிறகு படம் ஹிட் அடைந்ததும் அய்யயோ போச்சு என வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்திற்கும் நடந்துள்ளது, அது வேற ஒன்றும் கிடையாது பரத், பசுபதி, பாவனா, பிரியங்கா ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய வெயில் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வசந்தபாலன் உருவாக்கிய திரைப்படம்தான் அங்காடித்தெரு.
இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி இயக்குனர் வெங்கடேஷ் என பலர் நடித்திருந்தார்கள் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருந்தார், அதன்பிறகு இயக்குனருக்கும் ஜீவி பிரகாஷ் குமாருக்கும் இடையே பெரய சண்டை நடைபெற்ற நிலையில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அங்காடி தெரு படத்தில் கமிட்டானார்.
இந்த திரைப்படத்தை ஐயங்கரன் நிறுவனம் தான் தயாரித்திருந்தது, அங்காடித்தெரு திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரியும் படத்தின் கதை சென்னையில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல கடையில் வேலை செய்யும் இளம் பெண்களும் ஆண்களும் எப்படி கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.
பல விருதுகளை தட்டிச்சென்ற இந்த திரைப்படத்தில் முதன் முதலில் இயக்குனர் வசந்தபாலன் தனுஷ் நடித்து இருந்தால் நல்லா இருக்கும் என தனுஷிடம் போய் கதையை கூறியுள்ளார் ஆனால் தனுஷ் அதை முழுவதும் கேட்டுவிட்டு படம் அருமையாக வரும் ஆனால் நான் நடிப்பதை விட புதுமுக நடிகர் நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.
அதன் பிறகுதான் புதுமுக நடிகர் மகேஷ் நடித்தார் இந்த திரைப்படம் தனுஷ் நடித்தால் வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை புதுமுக நடிகர்கள் மகேஷ் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த தகவலை தெரிந்து கொண்ட தனுஷ் ரசிகர்கள் உச்சுகொட்டி தனுஷ் நடித்திருந்தால் இன்னும் மெகாஹிட் அடைந்திருக்கும் எனக் கருத்துக் கூறி வருகிறார்கள்.