அங்காடித்தெரு இயக்குனரின் திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கும் மாஸ்டர் பட வில்லன்.!

master
master

நடிகர் அர்ஜுன் தாஸ் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் இவர் சமீபத்தில் கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

இவரின் உடல் அமைப்பு மற்றும் குரல் வளத்திற்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அர்ஜுன் தாஸ் அட்லி தயாரிப்பில் வெளியாகிய அந்தகாரம் என்ற திரைப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸ்  அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது. இந்த நிலையில் முதன் முறையாக வெள்ளித்திரையில் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

arjun dos
arjun dos

படத்தை இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவான அற்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கயிருக்கிறார் ஏற்கனவே வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு காவியத்தலைவன் என கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் வசந்தபாலன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் அப்படி இருக்கும் வகையில் ஜீவி பிரகாஷ் அவர்களை வைத்து வசந்தபாலன் ஜெயில் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்தநிலையில் வசந்தபாலன் அவருடைய சொந்தத் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைக்க இருக்கிறார். இது குறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன் தாஸ் தன்னுடைய புதிய பயணத்தை அவருடைய குழுவுடன் தொடர இருப்பதாகவும்  மக்களின் ஆசிர்வாதமும் பிரார்த்தனைகளும் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.