இந்த ஒரே ஒரு காரணத்தினால் தான் அஞ்சலி அங்காடித்தெரு திரைப்படத்தில் ஹீரோயினானார்..! உண்மையை உடைத்த இயக்குனர்..!

angaditheru

angadi theru first heroin: தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் அங்காடித்தெரு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மகேஷ் மற்றும் கதாநாயகியாக அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலமாக அஞ்சலியின் லெவல் மாறிவிட்டது. இந்த திரைப்படத்தின் கதையானது சென்னையில் உள்ள பிரபல கடையில் பணிபுரியும் ஏழ்மையான இளைஞர்கள் படும் கஷ்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இவ்வாறு இந்த திரைப்படம் ஆனது சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளிலேயே பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டதாம் இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் ஒருகாலத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

நமது இயக்குனர் ஆல்பம் வெயில் அங்காடித்தெரு அரவான் காவியத்தலைவன் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் மேலும் இத் திரைப்படமானது வெளிய வந்து கடந்த இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது இதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த திரைப்படத்தை பற்றி நமது இயக்குனர் பேசி உள்ளார்.

இவ்வாறு இந்த பேட்டி மூலமாக பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் அஞ்சலிக்கு முதலாக முதல் முதலாக நடிக்க இருந்த நடிகை வேறு ஒரு நடிகையாம் அவர் வேறு யாரும் கிடையாது இந்த திரைப்படத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்துபோகும் அந்த பெண்தான்.

angadi theru-1
angadi theru-1

ஆனால் படம் ரொம்ப போரடித்து விடும் என்ற காரணத்தினால் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் வைக்கலாம் என திட்டமிட்டார்கள் இதன் காரணமாக ரொமான்ஸ் காட்சி என்றாலே தெரிந்த நடிகை என்றால் தான் க்ளிக் ஆகும் இதன் காரணமாகவே அஞ்சலியை இந்த திரைப்படத்தில் தேர்வு செய்தார்களாம்.

அஞ்சலி இந்த திரைப்படத்திற்கு முன்பாக கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து தான் அங்காடித்தெரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்கள்.

angadi theru-2