Angadi theru sindhu : திரையுலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த பல நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். இது திரையுலகினரையும் தாண்டி ரசிகர்களையும் கண்கலங்க வைக்கிறது. விவேக்,, மயில்சாமியை தொடர்ந்து அங்காடி தெரு பட நடிகை தற்போது உயிரிழந்து உள்ளார்.
திரை உலகில் பல வருடங்களாக காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு பெயரையும், புகழையும் வாங்கி கொடுத்தது வசந்த பாலன் இயக்கத்தில் உருவான அங்காடித் தெரு திரைப்படம் தான் அதன் பிறகு படங்களில் நடித்து காசு சம்பாதித்தார் இப்படிப்பட்ட நடிகை சிந்து நிஜ வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.
இவரது அம்மா இளம் வயதிலேயே இறந்துவிட்டதால் சிந்துவிற்கு 14 வயதில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிய சிந்து சில நாட்களிலேயே கணவரின் கொடுமையை பார்த்தார் ஆம் அவருடைய கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவாராம்..
இதனால் அப்பா வீட்டிற்கு போய்விட்டாராம். குழந்தையை வளர்க்க அவரும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த மீதி இருக்கின்ற நேரங்களில் ஹோட்டல் வேலை, சித்தாள் வேலை என அனைத்தையும் செய்து எப்படியோ தனது குழந்தையை வளர்த்து வந்தாராம்.
திடீரென அவரது அப்பா இறந்து விட மகளை வளர்த்து வந்தார் ஒரு கட்டத்தில் சிந்துவிற்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த பின் தான் தெரிந்தது புற்றுநோய் இருப்பது என்று அதன் பிறகு தன்னிடம் இருந்த நகை பணத்தை எல்லாம் வைத்து மருத்துவமனை செலவை பார்த்து வந்தார்.
சுத்தமாக கையில் காசு இல்லாதால் திரை உலகில் தனக்கு தெரிந்தவர்களின் உதவியை நாடி இருக்கிறார் சிலர் உதவி செய்தீர்கள் சிலர் கண்டுகொள்ளவில்லையாம் இப்படி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த இவர் இன்று அதிகாலை 2 : 15 மணிக்கு இயற்கை எழுதி உள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர் ஒரு சிறந்த நடிகையை இழந்துவிட்டோம் எனக் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.