தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கிய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இயக்குனர் என்றால் அது மிஸ்கின் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிசாசு திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மிஷ்கின் அவர்கள் முடிவு செய்த நிலையில் இந்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்பொழுது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளது யார் என்றால் அது ஆண்ட்ரியா தான் இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மட்டுமில்லாமல் இதில் பல்வேறு காட்சிகள் ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டும் அளவிற்கு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் ஒர்க் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகளும் போஸ்டர்களும் வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் செய்தியையும் பட குழுவினார்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வகையில் பிசாசு இரண்டாம் பாகம் ஆனது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதாக பட குழுமங்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படம் ஆனது தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால் ஆண்ட்ரியா பிசாசு வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Rockfortent @andrea_jeremiah @Lv_Sri @shamna_kkasim @kbsriram16 @SVC_official @saregamasouth @UrsVamsiShekar pic.twitter.com/dt0FtLxDPd
— Mysskin (@DirectorMysskin) July 13, 2022