இசையமைப்பாளராகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா தற்பொழுது ‘நோ என்ட்ரி என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த டிரைலரை பார்க்கும் பொழுது ஆண்ட்ரியா மற்றும் அவர்களுடைய குழுவினர்கள் காட்டிற்கு சென்று ஆய்வு நடத்துவதற்காக செல்கின்றனர்.
எனவே அவர்கள் செல்லும் பொழுது அங்கு வேட்டை நாய்களால் சூழப்படுகின்றனர் அவர்களிடம் இருந்து ஆண்ட்ரியா மற்றும் அந்த குழுவினர்கள் எப்படி தப்பிப்பார்கள் என்பதே இந்த படத்தின் கதை. வேட்டை நாய்களை வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை நான் அழகு கார்த்திக்கு என்பவர் இயக்க இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், ரான்யா ராவ், மனஸ், ஜெயஸ்ரீ, ஜான்பி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இதனை அடுத்து ராஜேஷ் இசை அமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு இந்த ட்ரெய்லரில் உள்ள திரில்லர் காட்சிகளை பார்க்கும் பொழுது கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ரியா நடிப்பில் சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு எந்த படமும் வெளிவராமல் இருந்து வரும் நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ஆண்ட்ரியா விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நெகட்டிவ் பாயிண்டை பெற்றது.