Master Movie : விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இணைந்து ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தொகுப்பாளினி vj ரம்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், அந்த பேட்டியில் ஆண்ட்ரியா விஜய் பற்றியும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றியும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது விஜய் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர் மிகச்சிறந்த மனிதர் மிகவும் எளிமையானவர் அவர் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் என்னுடைய ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்தேன் இந்த படத்தில் நான் பாடல் எதுவும் பாடவில்லை அதேபோல் பெண்கள் பாடும் எந்த ஒரு பாட்டும் படத்தில் இடம்பெறவில்லை எனக் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் விஜய் உடன் எனக்கு ஒரு சேசிங் காட்சி இருக்கிறது எனவும் அந்த காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார். மேலும் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கியமானவர் மாஸ்டர் படத்தை அடுத்து நான் அரண்மனைக்கிளி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறேன் எனக் கூறினார் ஆண்ட்ரியா.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால் திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாக வில்லை ஆனால் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது, மாஸ்டர் திரைப்படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் ஆண்ட்ரியா இப்படி ஒரு தகவலை கொடுத்துள்ளது விஜய் ரசிகர்களை கொண்ட செய்துள்ளது.