தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனக்கு நடந்த கொடூரமான சம்பவத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார் இதற்கு நடிகரும் பத்திரிக்கையாளரும்மான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது நடிகை ஆண்ட்ரியா அவர்களிடம் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தனக்கு நடந்த கொடூரமான சம்பவம் எது என கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது அதற்கு பதில் அளித்த ஆன்ட்ரியா நான் தனது அப்பாவுடன் பேருந்தில் சென்றுகொண்டு இருக்கும் போது எனது மேல் யாரோ ஒரு நபர் கை வைத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தனது உடலையும் உரசி பார்த்திருக்கிறார்.
இதனால் கடுப்பான நடிகை ஆண்ட்ரியா யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனது அப்பா அருகில் போய் உட்கார்ந்து விட்டாராம். இதை தனது அம்மாவிடம் கூட சொல்லவில்லை என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் நடிகை ஆண்ட்ரியா. சினிமாவில் பல திரைப்படங்களில் போல்டாக நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா இவ்வாறு செய்தது ரசிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஆண்ட்ரியா எந்த ஒரு ஒளிவும் வரைவும் இல்லாமல் பேசியது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஆண்ட்ரியாவை பாராட்டியுள்ளார். ஏனென்றால் யாராக இருந்தாலும் தங்கள் வாழ்க்கையில் நடந்த கொடூரமான சம்பவங்களை சொல்ல தயங்குவார்கள் ஆனால் ஆண்ட்ரியா அப்படி கிடையாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.