காலையில இப்படி பண்ணுனா உடம்புக்கு நல்லது என்று புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!!

andrea
andrea

Actress Andrea yogo photo:தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் 2002 ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அவர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மன்றம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனையடுத்து அவர் சிறந்த கதைகள் உள்ள படங்களில் நடித்து வந்தார். அதிலும், குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், அவள், வடசென்னை, விஸ்பரூபம் போன்ற படங்களில் தனது நடிப்பை மேலும் வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தற்பொழுது அவர் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி. இதை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார் இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்பொழுது ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கி உள்ள ஆண்ட்ரியா அவ்வப்பொழுது தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது காலையில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

andrea
andrea