தமிழ் சினிமாவில் பாடகராக தனது பயணத்தை தொடர்ந்த ஆண்ட்ரியா பின்னாட்களில் நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்றினார் நடிகை ஆனா உடனே ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களைத் நடித்ததால் ஆண்ட்ரியாவின் மார்க்கெட் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது மேலும் சோலோ ஹீரோயினாக படங்களில் நடிக்கவும் ரெடியாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல், விஜய்க், தனுஷ் போன்ற நடிகர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் கஷ்ட்டப்பட்டு நடிப்பை அவர் வெளிகாட்டி உள்ளதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் கூறினார்.
மேலும் இந்த திரைப்படத்திற்காக அவர் பல விருதுகளையும் வெல்வார் என அவர் கூறி உள்ளதால் ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து உள்ளது. இதை முடித்த கையோடு ஆண்ட்ரியா பல டாப் நடிகர்கள் படங்களிலும் கைகோர்க்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருந்தாலும் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா தற்போது தனது கல்லூரி தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவையும் போட்டு உள்ளார்.
நான் கல்லூரி பெண்ணாக இருந்தபோது பெரிய பெண்ணாக மாற வேண்டும் என விரும்பினேன். இப்பொழுது பெரிய பெண்ணாக இருக்கிறேன் ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரி பெண்ணாக திரும்பி செல்ல விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இவர் போட்ட பதிவும், புகைப்படமும் வேற லெவெலில் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.