தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த தரமணி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரையும் நல்ல வெற்றியையும் தேடிக் கொடுத்தது. நடிப்பது மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வருவார் தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விஸ்வரூபம் திரைப்படத்திலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பணத்திற்காக ஆசைப்படாமல் நல்ல கதை உள்ள திரைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிப்பது மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்களையும் எழுதி பாடுவது இசை அமைப்பது என தனது பணியை சினிமாவில் தொடர்ந்து வருகிறார். இவர் நடித்த வடசென்னை திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பெரிதாக பேசப்பட்டது அதுமட்டுமில்லாமல் ரசிக்கும்படி அமைந்தது. இந்த நிலையில் இவர் பிசாசு 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் கா என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் இதன் பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு புகைப்பட கலைஞராக நடிக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சின்ன கவுண்டர் வில்லன் சலீம் கவுஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் காடுகளை பின்னணியாக வைத்து படமாக்க இருக்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் என்னதான் பிஸியாக சினிமாவில் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிடுவார் அந்தவகையில் ஊஞ்சலில் படுத்துக்கொண்டு தனது கால்களை நீட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கட்டை விரலை விட பக்கத்து விரல் நீளமாக இருக்க கல்யாணம் பண்ணிக்க போறவன் கொடுத்து வைத்தவன் என கமெண்ட் செய்துள்ளார்கள்.