தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா, அதன்பிறகு 2007ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும், மேடையில் நடனமாடிக் கொண்டு ஆடுவது என பல திறமைகளை சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக ஆண்ட்ரியா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேடித்தேடி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தரமணி என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு தனுஷுடன் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
வடசென்னை திரைப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து ஆண்ட்ரியாவா இப்படி நடித்திருப்பது என ஆச்சரியத்துடன் பல ரசிகர்கள் பார்த்தார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக ஆண்ட்ரியா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் பிசாசு 2 திரைப்படத்தில் நாயகியாக தற்போது நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அந்த வகையில் ஃபேஸ்புக் தளத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மூடு என கேப்ஷன் போட்டு கத்தரிக்காய் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரேடியாக உசுப்பேற்றி விட்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.