விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய ஆண்டவர்..!

kamal-11
kamal-11

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருபவர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை உலகநாயகன் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஆனது ஜூன் மாதம் மூன்றாம் தேதி வெளியாகி  மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரும் அளவு சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படம் நடிகர் கமலுக்கு ஒரு மயில்கல்ளாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் மட்டும் இன்றி இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி கூடியது.

மேலும் இந்த திரைப்படம் ஆனது சுமார் 120 கோடி முதல் 130 கோடி வரையிலான பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் நானூறு கோடிக்கு மேலாக வசூல் செய்து மாபெரும் வெற்றி திரைப்படம் அமைந்தது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ளது.

மேலும் நடிகர் கமலஹாசன் அவர்கள் இந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்ததற்காக சுமார் 130 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் 130 கோடி சம்பளம் பெற்ற நிலையில் அடுத்ததாக வேறு தயாரிப்பாளர் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் கமலஹாசன் அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளம் விவரம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் பெறலாம் என முடிவு செய்துள்ளாராம்.