தொகுப்பாளர் ரக்ஷன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறாரா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

rakshan-1
rakshan-1

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி ரசிகர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நிகழ்ச்சிகள் வரும் சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

அந்தவகையில் அறிமுகமான சில வாரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்த நாடகம் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அறிமுகமாகும் போது ஒரு பெண் அம்மா இல்லாமல் சித்தியிடம் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை மையமாக ஒளிபரப்பானது.

இதுதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு இந்நாடகத்தின் கதாநாயகன் கதாநாயகியை எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை ஒளிபரப்பி வந்ததார்கள் இந்த எபிசோடும் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருந்தது.

திருமணத்திற்கு பிறகு கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் பிறகு கதாநாயகன் கதாநாயகியை சந்தேகப் பட்டதால் கதாநாயகி மிகவும் கோபமடைந்து அந்த வீட்டை விட்டு வந்து விடுவார்.

அதன் பிறகு பையை தூக்கிக்கொண்டு ரோடு ரோடாக அலையும் எபிசோட் ரசிகர்களிடம் பெரிதும் கலாய்க்க பட்டது. இந்நிலையில் எட்டு வருடங்களுக்கு பிறகு என்று கூறி கொஞ்சம் கதையை மாற்றி தற்போது ஒளிபரப்பாகி வரும்  எபிசோட் ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அகிலன் மற்றும் அஞ்சலி ரோலில் நடித்து வரும் ரிஷி மற்றும் கண்மணி ஆகியவர்களுடன் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான ரக்ஷன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரக்ஷன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒன்றாக சந்தித்துள்ளார்கள்.அவ்வபோது எடுத்த புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.