anchor rakshan and jaquline latest news : தமிழ் தொலைக்காட்சிகளில் மிக முக்கிய தொலைக்காட்சி தான் விஜய் டிவி இந்த விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளினிகள் பணியாற்றி உள்ளார்கள் அதில் பெயர்போன தொகுப்பாளினிகள் ஏராளம் அந்தவகையில் திவ்யதர்ஷினி அர்ச்சனா போன்ற பல்வேறு தொகுப்பாளினிகள் இடம் பெற்றுள்ளார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியின் மூலமாக பிரபலமான ஒரு தொகுப்பாளர் தான் ரக்ஷன். தொகுப்பாளர் ரக்ஷன் தற்சமயம் விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியை பார்க்கவே மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.
இவ்வாறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் தற்சமயம் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளர் தற்சமயம் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ரக்ஷன்க்கு திருமணமான விஷயமே இதுவரை யாருக்கும் தெரியாது ஆனால் தற்சமயம் இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்தது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இதற்கு முன்பாக ரக்ஷன் மற்றும் ஜாக்லின் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இதற்கு முன்பாக ரக்ஷன் தனக்கு திருமணம் ஆனதை இதுவரை யாரிடமும் வெளியே சொன்னதே கிடையாது ஏனெனில் தன்னுடைய ரசிகர் கூட்டம் குறைந்து விடுமோ என்ற காரணம்தான்.
ஆனால் இன்று லவ்வர்ஸ் டே நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமில்லாமல் ரக்ஷன்க்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளதாம்.