விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரியங்கா தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய விடாமுயற்சியினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து சுட்டி டிவி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு தன்னுடைய சிறந்த பேச்சுத் திறமையினால் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றார். தொகுப்பாளினி பிரியங்கா இதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் மேலும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணமானது ஆனால் தற்பொழுது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் இது பற்றிய தகவல் தற்பொழுது வரையிலும் தெளிவாக தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரியங்காவின் சகோதரர் ரோஹித் மனைவிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பிரியங்கா பதிவு செய்தார். அந்தக் குழந்தையை கையில் தூக்கி அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் ஏராளமானவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று லைக்குகளை குவித்தது வருகிறது.
இந்நிலையில் சற்று முன்பு பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி இருந்ததாகவும் ஆனால் இந்த குழந்தையை பார்த்ததும் கவலை எல்லாம் ஓடிப் போச்சு என்றும், இதுதான் என் உலகம் என்றும், இது எனக்கு போதும் என்றும் பதிவு செய்துள்ளார். இவ்வாறு அந்த குழந்தையை தன்னுடைய மடியில் தூக்கி வைத்து தன்னுடைய அழகான பதிவை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் பிரியங்காவை பாராட்டி வருகிறார்கள்.