பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி மீது டிடிக்கு இப்படி ஒரு ஆசையா..? எல்லாம் அதுக்கு தான.!

dd-01
dd-01

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வளம் வருபவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் மாபெரும் ரசிகர் கூட்டத்தை தனக்கென உருவாக்கிவிட்டார்.

இவ்வாறு சினிமா நடிகைகளைப் போல இவருக்கு ரசிகர் கூட்டம் உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை மிகவும் ஜாலியாகவும் உற்சாகத்துடனும் காமெடியாகவும் கொண்டு செல்வார் இதன் காரணமாகவே ரசிகர்கள் பலரும் கவர்ந்து விட்டார்கள்.

அந்தவகையில் திவ்யதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.2 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் முதலமைச்சர் மகனான உதயநிதி ஸ்டாலின் பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து கூறியுள்ளார் மேலும் பல வருடங்களுக்கு முன்பாக காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் டிடி அவருடன் வீடியோ எடுத்தது தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினை எளிமையான மற்றும் வளர்ந்து வரும் அரசியல் தலைவர் என்று அவரை உயர்த்தி பேசியது மட்டுமல்லாமல் அவருடைய பிறந்தநாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் மேலும் நீங்கள் தற்போது அரசியல் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் உங்களை இன்டர்வியூ செய்வதற்கு நான் ஆசையாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறி உள்ளார்.

இவ்வாறு நமது தொகுப்பாளினியின் ஆசையை நமது தலைவர் நிறைவேற்றுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.