பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் எப்படி இருக்கிறதோ அதே அளவிற்கு சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் தொகுப்பாளினிக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் தொகுப்பாளினி களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி என்றால் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி தான் இவர் தனது சுட்டித்தனமான பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்துவிட்டார் திவ்யதர்ஷினி தன்னுடைய ஐந்தாவது படிப்பு படிக்கும் பொழுது டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் மேலும் தனது கால் தடத்தை பதித்தவர் டிடி.. சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார் இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
20க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் திவ்யதர்ஷினி பலமுறை விருதுகளையும் வாங்கியுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட இவருக்கு டார்லிங் ஆஃப் தி டெலிவிஷன் என்ற விருதும் வழங்கப்பட்டது சமூகவளைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் யாரோ ஒருவர் செருப்பை தூக்கி திவ்யதர்ஷினி மீது எறிகிறார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.