தளபதியை விட தல அஜித்துக்கு தான் அது செம்ம மாஸா இருக்கும்..! ஓப்பன் டாக் கொடுத்த டிடி..!

dhivya-dahrshini

anchor dd latest speech thala ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும்  வலம் வருபவர் தான் தல அஜித். இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது இவரை மிஞ்ச யாருமே கிடையாது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டிய தல அஜித் அவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் விசில் சத்தத்திற்கும் பாலாபிஷேகத்திற்கும் பஞ்சமே இருக்காது.

இந்நிலையில் விஜய் டிவி மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான திவ்யதர்ஷினி என்ற தொகுப்பாளினி தற்போது தல அஜித்தை பற்றி பேசிய விஷயமானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. திவ்யதர்ஷினி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி தன்னுடைய பள்ளி வயது நண்பனான ஒருவரை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடைய திருமணம் விவாகரத்தில் வந்து முடிந்து விட்டது.

இவ்வாறு விவாகரத்தின் பிறகாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பாதை எதுவோ அதில் அதிக கவனம் செலுத்தி வருவது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் நம்பர் ஒன் தொகுப்பாளினி ஆகவும் வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இடம் பேட்டி ஒன்றில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கு காப்பு போட்டால் அழகாக இருக்கும் என்று கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்த நடிகை டிடி தல அஜித் தான் என கூறி உள்ளார்.

ennai arinthaal
ennai arinthaal

ஏனெனில் என்னை அறிந்தால் திரை படத்தில் தல அஜித் வெள்ளை சட்டை புல்லட் கையில் காப்பு என இருக்கும் அந்தக் காட்சியானது என்றுமே செம மாஸ் தான் என குறிப்பிட்டுள்ளார்.

ennai arinthaal