தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் தொகுப்பாளினிகளுக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதிலும் சில தொகுப்பாளினிகள் தன்னுடைய திறம்பட பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டு விடுவார்கள். மேலும் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர் அடிமையாகி விடுவார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் டிடி, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்தான்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பல நடிகை மற்றும் நடிகர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதனால் அவர்கள் தங்களது அன்றாட வேலைகளை வீடியோவாக எடுத்த புகைப்படம் எடுத்தும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதிலும் சில நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் தொகுப்பாளினி டிடி தன்னுடைய பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அந்த புகைப்படத்தில் டிடி ஸ்டூலின் மீது ஏறி நின்று கொண்டிருக்கிறார். மேலும் அதற்கு கேப்டனாக நான் குள்ளம் தான் ஆனால் என்னை குள்ளச்சி என யாராவது அழைப்பீர்களா.! குள்ளமானவர்கள் மிகவும் டேஞ்சரான
வர்கள் பாதுகாப்பாக இருந்துக்கோங்க என கூறியுள்ளார்.