தமிழ் சினிமாவில் தொகுப்பாளினி என்று பெரிய அளவில் பேசப்படும் விஜய் டிவி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி தான். இதுவரை இவரை மிஞ்சும் அளவிற்கு சினிமாவில் எந்த தொகுப்பாளரும் வளரவில்லை.
இவர் விஜய் டிவியில் 20 வருடங்களுக்கும் மேல் பணிபுரிந்து தற்போது திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே பலர் இந்த சேனலை பார்க்க ஆரம்பித்தனர்.
இவர் தற்போது முக்காதே பெண்ணே என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிகை, நடனம், தொகுப்பாளினி, பேராசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர்.
சமீபத்தில் தனியார் மீடியா நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி விருதினை வழங்கினார். அந்த விருது வழங்கும் விழாவில் பொதுமேடையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் என்பவருக்கு விருதினை வழங்கி கன்னத்தில் முத்தத்தை கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் பல லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறது.இதோ அந்த புகைப்படம்.