குழந்தைப் பற்றி கேட்ட ரசிகர்.! புகைப்படத்தை வெளியிட்டு பதில் கூறிய தொகுப்பாளினி…

bhavana-01

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் vj. பாவனா. இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கடைசியாக ஜூனியர் சூப்பர் சிங்கரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிறகு தற்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் ராஜ் டிவியில் தான் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார். பிறகு தனது கடின முயற்சியினால் மெல்ல மெல்ல உயர்ந்து பிரபலமடைந்தார்.

இவர் குரலை வைத்து பல ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் ஆனால் அதை எல்லாம் விளையாட்டாக எடுத்துக் கொள்வார். இந்நிலையில் இவரும் மற்றவர்களைப் போலவே தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது மற்றும் லைவ் சேட்டில் ரசிகர்களிடம் உரையாடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு குழந்தை உள்ளதா என்று கேட்டதற்கு பாவனா குழந்தை இல்லை சகோதரர் ஒருத்தர் உள்ளார் என்று கூறி தனது நாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

bhavana 1
bhavana 1

இன்னொரு ரசிகர் திருமணத்தைப் பற்றி கேட்டதற்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது என்று கூறியுள்ளார்.