தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இவர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படம் வெளியான நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகி வரும் லைகர் படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களுடன் குத்து சண்டை வீரர் மைக் டைசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாக உள்ள நிலையில் தற்போது திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இத்திரைப்படத்தினை பூரி ஜெயகாந்த் இயக்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா மற்றும் அனன்யா பாண்டே இருவரும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் அவ்வப்பொழுது ஏராளமான கேள்விகள் இவர்களுக்கு இடையே கேட்கப்பட்ட நிலையில் சுவாரஸ்யமான பதில்களையும் கூறியுள்ளார்கள்.
மேலும் நடிகையான்பாண்டே விஜய் தேவரகொண்டான் குறித்து இவரிடம் கேட்கப்பட்ட நிலையில் அவர் ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருகிறார் என்பது போன்ற மறைமுகமாக ஒரு பதில் கொடுத்தார். அதற்கு விஜய் தேவரகொண்டா நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு அனன்யா ஆமாம் என்று கூறியுள்ளார்.
பிறகு இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா என்னுடைய நல்ல நண்பர்,அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன்,அவர் என்னுடைய டார்லிங்,அவரை நேசிக்கிறேன் என கூறிவுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா கூட்டணியில் வெளிவந்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த திரைப்படங்களின் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வதந்திகளில் சிக்கிவுள்ளனர். இந்த நேரத்தில் விஜய் தேவர்கொண்டா,ராஷ்மிகா மந்தனாவை காதலுக்கு வருகிறார் என மேலும் அனன்யா பாண்டே கொளுத்தி போட்டுள்ளார்.