சின்னத்திரையில் இருந்து பல சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக பல திரைப்படவாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் ஒரு சில பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து கொண்டே பல சீரியல்களில் நடித்து மக்களிடையே புகழை பெற்று வருகிறார்கள்.அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் நிறைய நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிடுகிறார்கள்.
அதேபோல் சின்னத்திரையில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1சீசன் 6கலந்து கொண்டு மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் ஆனந்தி இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் சின்னத்திரை பக்கமே வரவில்லை.
தனக்கு குழந்தை பிறந்த சில நாட்களுக்குப் பிறகு சில பேட்டிகளில் வந்து பேட்டி அளித்த இவர் தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுப்புது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அந்த வகையில் இவர் எப்போது புகைப்படம் வெளியிட்டாலும் அவரது ரசிகர்கள் உடனே லைக்,ஷேர் செய்து விடுவார்கள்.
இந்நிலையில் தற்போது இவரது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறாராம்.இந்நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மற்ற பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த பலரும் உங்களது ஆட்டத்தை பார்ப்பதற்கு நாங்கள் தயாராகி விட்டோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் நீங்கள் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்று எப்படியாவது வெள்ளித்திரையில் உங்களது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வேண்டும் அதுதான் எங்களது கனவு என கூறி வருகிறார்கள்.