தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்கலாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள் நடிகர் செந்தில், கவுண்டமணி. இவர்களுடைய காமெடிக்கு வேற எந்த நடிகராக இருந்தாலும் அடிபணிவார்கள் அப்படி இவர்களுக்கு பின்னால் பிரபலமானவர்தான் வைகைப்புயல் வடிவேலு. தன்னை தானே அசிங்கப்படுத்திக் கொண்டு சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் வடிவேலு ஒரு சில பிரச்சனையின் காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதாவது இயக்குனர் சங்கர் அவர்களுக்கும் வடிவேலு அவர்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வடிவேலுவிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு நீண்ட ஆண்டுகள் சினிமாவில் தோன்றாத வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகளும் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகர் வடிவேலு அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடித்த வருகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வர மாட்டாராம்.
அதுமட்டுமல்லாமல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் சிறிய வேலை இருப்பதாக பொய் கூறிவிட்டு அங்கு சென்று விடுவாராம். இதனால் சந்திரமுகி 2 படபிடிப்பு தளத்திற்கு சரியாக வர மாட்டார் என்று தகவல் வழியாகியுள்ளது அது மட்டுமல்லாமல் இதை அறிந்த லைக்கா நிறுவனம் வடிவேலுவை கண்டித்து இருக்கிறது ஏனென்றால் சந்திரமுகி படத்தையும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.
இதனால் நீங்கள் சந்திரமுகி படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு நாய் சேகர் படத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என்று லைக்கா நிறுவனம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திமிராகவே வந்துவிட்டாராம் நடிகர் வடிவேலு. இதே போல தான் சங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள ஒரு படத்தில் வடிவேலு திமிராக நடந்து கொண்டதால் வாக்குவாதம் நடந்தது அதன் பிறகு ரெட் கார்ட் வடிவேலுக்கு கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.