ரஜினிக்காக எழுதிய கதையில் கமல்.! உலகநாயகன் நடிக்க காரணம் இதுதானா,?

rajinikanth
rajinikanth

Indian movie: உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இந்தியன். இந்தியன் படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான நிலையில் இதுவே இவர்களுடைய முதல் கூட்டணியாகும்.‌ இந்தியன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. அப்படி இந்தியன் 2ம் பாகத்திலும் கமலஹாசன் தான் ஹீரோவாக நடித்த வருகிறார். ஆனால் இந்தியன் படத்தின் கதை ரஜினிகாந்தை மனதில் வைத்து  எழுதப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் இதில் படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் முதலில் கமல் அல்லது சரத்குமார்  நடிக்க இருந்துள்ளார்கள். இதனை அடுத்து கமலஹாசன் உடன் இணைய வேண்டும் என ஷங்கர் நினைத்ததால் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தினை இயக்கியிருந்தார்.

இந்தியன் படத்தில் கமலஹாசனின் கேரக்டர், கெட்டப் போன்றவை ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்ததால் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. எனவே இந்தியன்  வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாவது பாகம் சமீபத்தில் உருவாகி வருகிறது. மேலும் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முயற்சி செய்துள்ளார். எனவே அவரை வைத்து இந்தியன் படத்தின் கதையை எழுதினார். ஆனால் ரஜினியால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதன்பிறகு  கமலிடம் இந்தியன் படக் கதையை கூற கதைப்பிடித்து போனதால் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என்பதற்காக சில செம்ம ஸ்டைலான காட்சிகளை உருவாக்கி இருக்கிறார். ஆனால் வேறு வழி இல்லாமல் கமலுக்கு பொருந்திய ஸ்டைலில் பட காட்சிகளை உருவாக்கியுள்ளார். அப்படி முக்கியமான காட்சியான, கமலஹாசனை அரெஸ்ட் செய்வதற்காக நெடுமுடி வேணு தனியாக செல்வார். அப்பொழுது ஈஸி சேரில் உட்கார்ந்திருக்கும் கமல் எதிரில் அமர்ந்திருக்கும் நெடுமுடி வேணுவை அடித்து நொறுக்குவார்.

இருவருமே வயதான கெட்டப்பில் மோதும் இந்த சண்டைக்காட்சி இருக்கும் சீனில் நெற்றியில் விழும் தனது முடியை ஸ்டைலாக விளக்கி விடுவார் பின்னர் கீழே விழுந்த துண்டை தனது தோளில் போடுவார் கமல் இவ்வாறு இந்த சீனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதில் வைத்து தான் ஷங்கர் எழுதியதாக கூறியுள்ளார்.