மாரிமுத்துவின் மரணத்தை அப்பவே கணித்த ஜோதிடர்.? அட அப்பவே கொஞ்சம் யோசித்து இருக்கலாம் இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம்..

marimuthu 1
marimuthu 1

Ethirneechal Marimuthu: இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக பேசியதினால் தான் உயிரிழந்தார் என்ற பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது. உதவி இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமான மாரிமுத்து பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது எனவே நடிப்பில் கவனம் செலுத்திய இவர் மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இவருடைய எதார்த்தமான நடிப்பினால் தொடர்ந்து துணை நடிகராக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அப்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் இவருடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த சமயத்தில் தான் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களம் இறங்கினார். இதுவரையிலும் இயக்குனராகவும், துணை இயக்குனராகவும் கிடைக்காத புகழை எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் பெற்று கொடுத்தது.

ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராக மாறிய மாரிமுத்து இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டு உடல்நிலை சரியில்லாதது போல் இருந்ததால் அவரே வண்டியில் சென்று சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவருடைய இறப்பு ரசிகர்களையும், திரையுலகினர்களையும் அதிர்ச்சியில் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

marimuthu
marimuthu

இதற்கிடையில் மாரிமுத்து உயிருடன் இருந்த பொழுது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடர்கள் தான் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என்று இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார் இப்பொழுது முகத்தை தூக்கி எங்கே வைத்துக் கொள்வீர்கள் என கேட்டார்.

எனவே இதனால் திடீரென உயிரிழந்ததற்கு அவர் ஜோதிடர்களுக்கு எதிராக பேசியது தான் காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இந்நிகழ்ச்சியின் பொழுது ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவிடம் உங்கள் இடுப்புக்கு மேல் பிரச்சனை இருக்கிறது என்றார் ஆனால் மாரிமுத்து அதெல்லாம் இல்லை இடுப்புக்கு மேலே இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது அவ்வளவுதான் என சொல்லியிருந்தார். இதனை கவனித்த சிலர் ஜோதிடர் சொன்னது உண்மைதான் என கூறி வருகிறார்கள்.