காப்பி பேஸ்டில் வசமாக சிக்கிய தமன்.! இது என்னடா வாரிசுக்கு வந்த சோதனை

varisu
varisu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தில் அமைந்துள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் யூட்யூபிலும் பல சாதனைகளைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது இதற்கு காரணம் இசையமைப்பாளர் தாணுதான் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை மொச்ச கொட்ட பல்லழகி என்ற பாடலிலிருந்து காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது என்று ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க அதனை தொடர்ந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் கண் திறந்து பாரம்மா என்ற படத்திலிருந்து இடம்பெற்றுள்ள உன்னைத்தானே அம்மானு எல்லாருக்கும் நான் சொல்லி வைத்தேன் என்ற பாடலின் காபி தான் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் என்று கூறிய கலாய்த்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவுடன்  இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. வாரிசு திரைப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என  கூறப்படுகிறது. மேலும் தளபதி 67 குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கபடுகிறது.