தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் ஒரு இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த அளவிற்கு வெறும் நாலு படங்களில் உச்சத்தை அடைந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு அந்த இடத்தை விஜய் மற்றும் அஜித் தான் நிரப்புவார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து துணிவு படத்தின் ஒரு மணி ஷோ காட்சியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். துணிவு படம் வெளியான முதல் நாள் ரோகிணி திரையரங்கு முழுக்க ரசிகர்களால் சூழப்பட்டது அந்த அளவிற்கு கூட்டங்கள் இருந்தது. இந்த நிலையில் துணிவு படத்தின் ஒரு மணி காட்சியை பார்க்க சென்ற பரத் என்பவர் ரசிகர்களோடு ரசிகராக ஜாலியாக இருந்து வந்துள்ளார்.
அப்போது மெதுவாக சென்று இருந்த லாரி மீது ஏறி அலப்பறை செய்த அஜித் ரசிகர் பரத் கீழே குதித்ததால் தண்டுவடம் காயமடைந்ததை ஒட்டி சுற்றி இருந்த அஜித் ரசிகர்களின் உதவியால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பரத் உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என கூறியது மட்டுமல்லாமல் சந்தோஷமாக சென்று படத்தை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என நினைக்கிறேன் உயிரைக் கொடுக்கும் அளவிற்கு எதுவும் இல்லை உயிரிழக்கும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.