தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளங்கள் ஏராளம் என்று சொல்லலாம். மேலும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டா பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படம் முடிந்தவுடன். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் தளபதி 67 குறித்து அவபோது அப்டேடுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்ப்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது விஜயுடன் இணைந்து ஒரு நாய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டியில் இதுவரைக்கும் நான் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்தது இல்லை ஆனால் எனக்கு விஜய் உடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆம் முன்னணி நடிகர்களான அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதுவரைக்கும் நான் விஜயுடன் எந்த ஒரு திரைப்படத்திலும் அம்மாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பின்வரும் காலங்களில் நான் விஜயின் அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறிய தகவல் விஜயின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.