விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் நடித்து வந்த நடிகர் திடீர் தற்கொலை.! அதிர்ச்சியில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..

vijay-tv
vijay-tv

சின்னத்திரைகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பிஇல் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது ரியாலிட்டி ஷோக்கல் புதுப்புது சீரியல்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது.

அப்படிதான் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலாமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலில் இளம் நடிகர்களை வைத்து இயக்கப்பட்டு வருகிறது அதிலும் இந்த சீரியல் ஒரு கல்லூரியை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பொதுவாக கல்லூரி கதை என்றாலே இரண்டு கேங் இருப்பார்கள். அதே போல் இந்த சீரியலிலும் இரண்டு கேங் இருக்கிறது என்னதான் இரண்டு கேங் இருந்தாலும் ஏதாவது ஒரு கேங் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறுவார்கள் அந்த வகையில் வெண்ணிலாவின் கேங் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் இந்த நாயகியின் கேங்கிலிருந்து சில நடிகர்கள் சீரியலில் இப்பொழுது வருவது கிடையாது.

அந்த வகையில் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி இவர் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரின் இந்த அதிர்ச்சி முடிவை கேள்விப்பட்ட அவரும் நடித்த சக நடிகர்கள் ஏன் இது போல் செய்தாய் எனறு தங்களுடைய ஆதங்கத்தையும் வருத்தத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

katrukenna veli
katrukenna veli

சமீப காலமாக சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் திடீர் திடீரென பிரபலங்கள் இறப்பது அதிகரித்து வருகிறது இது சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.