நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுவது போல.. வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்த நடிகர்

Actor Vijay sethupathy
Actor Vijay sethupathy

Vijay sethupathy : தென்னிந்தியா சினிமா உலகில் பிரபலமான நடிகராக வருவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக நடித்த சமீப கால படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனால் அவர் வில்லனாக நடித்த  படம் பெரிய வசூலை அள்ளுகிறது இந்த நிலையில் விஜய் சேதுபதி பற்றி திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி இரண்டு, மூன்று படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இப்பொழுது ஓப்பனிங் கிடையாது சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினி – கமல் அதன் பிறகு அஜித் – விஜய் அடுத்ததாக சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இருவரும் வந்தார்கள்.

ஆனால் வந்தவர்களில் சிவக்கார்த்திகேயன் மார்க்கெட்டு எங்கையோ சென்று விட்டது. இவருடைய மார்க்கெட்டுக்கும் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லை.. அதே போல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கு  கிடைப்பதில்லை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரொம்ப ரொம்ப சுமாராக தான் இருந்தது ஆனால் அந்த படத்தின் வசூலில் 15% கூட விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படம் வசூல் செய்யவில்லை. இரண்டு பேரும் ஒரே காலத்தில் வந்தவர்கள் தான்..

விஜய் சேதுபதி மார்க்கெட் போனதற்கு அவர் வில்லன், கெஸ்ட் ரோல் என எல்லா கதாபாத்திரத்திலும் நடித்த காரணத்தினால் தான் அவருக்கு மார்க்கெட் போய் விட்டது. இனிமேல் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு எந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும் என்பது சத்தியமாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.