படப்பிடிப்பில் நடந்த அசம்பாவிதம்.! பூஜா ஹெக்ட்டேவின் புகைப்படத்தை பார்த்து பதறும் ரசிகர்கள்.!

pooja-hegde
pooja-hegde

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  இந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு தமிழ் வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்றுள்ளார் நடிகை பூஜா.

அதன் பிறகு இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபலமானார் அதன் பிறகு நடிகை பூஜாவுக்கு தமிழில் பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா தற்போது சல்மான் கான் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்போது படத்தின் படபிடிப்பில் கலந்து கொண்ட நடிகை பூஜாவிற்கு திடீரென ஏற்பட்ட விபத்தால் காயமடைந்தார். இதனால் தற்போது அவருடைய காலில் காயம் ஏற்பட்டது அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறுவதாகவும் இதனால் இரண்டு வாரங்கள் அவர் படத்தில் நடிக்கப் போவதில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளன. அடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் இரண்டு வாரம் கழித்து எடுக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை பூஜா அடிபட்ட காலில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் விரைவில் அவருக்கு குணமடைய வேண்டும் என்று வேண்டிய வருகின்றனர்.

மேலும் அந்த புகைப்படத்தை வெளியிட்ட உடனே ரசிகர்கள் பலரும் பூஜைகளுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். தற்போது அது ஒரு சின்ன காயம் தான் என அதற்கு பதில் அளித்துள்ளார் நடிகை  பூஜா.