வீடியோவை வெளியிட்டு நிதி திரட்டும் எமி ஜாக்சன் – கொண்டாடும் ரசிகர்கள்.

amy-jackson
amy-jackson

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது அந்த வகையில் மாடல் அழகிகள் சொல்லவே வேண்டாம் அவர்கள் தான் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதோடு ஆட்சி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து வந்து தற்போது டாப் ஹீரோ படங்களில் மட்டுமே நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டவர் தான் நடிகை எமி ஜாக்சன். முதலில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் வெள்ளைக்கார பெண் போல நடித்து அசத்தியிருப்பார் முதல் படமே அதிரி புதிரி ஹிட் எடுத்து அதன் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வகையில் விக்ரமின் ஐ, ரஜினியின் 2.0, விஜயின் தெறி மற்றும் பலா டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார் இப்படி சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த இவர்கள் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென கல்யாணம் செய்து கொள்ளாமலேயே சார்ஜ் என்பவருடன் நெருக்கமாக இருந்து கர்ப்பமானார்.

இதனால் சினிமாவுக்கு சிறிது காலம் விட்டுள்ளார் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் தற்பொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை எமி ஜாக்சன் ஒரு புதிய செயலை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது இதில் சிக்கி தவிக்கும் பச்சிலை குழந்தைகள் பலரும் பதுங்குகுழியில் ஓடி ஒளிந்து கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு நடிகை எமிஜாக்சன் நிதி திரட்டி வருகிறார். இச்செயல் தற்பொழுது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுவதால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.