தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியின் மூலம் சினிமாவுலகில் கால் பதித்து பின் படிப்படியாக வளர்ந்தார் ஒரு கட்டத்தில் சிறந்த இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் தற்பொழுது வசூல் மன்னனாக மாறி உள்ளார்.
இவர் கடைசியாக நடித்த பீஸ்ட், வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல அள்ளி வெற்றி கண்டதை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67 வது திரைப்படமான லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.
படத்தில் விஜய் உடன் கைகோர்த்து அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா, ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலன்டாக போய்க்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகளை இணையதள பக்கங்களில் உருவாவது வழக்கம் அதன்படி சமீபத்தில் தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு அம்பேத்கர் பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவிக்குமாறு தெரிவித்துக் கொண்டார் இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து அதன் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு அசத்தினர்.
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் விஜய் தனது வீட்டில் அம்பேத்கர் போட்டோவை வைத்து ஒரு மாலை கூட போடவில்லை.. ஊருக்கு உபதேசம் செய்யும் முன்பு நீங்கள் மாறுங்கள் என அவர் விமர்சித்தார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.