தமிழ் சினிமாவில் பல தவிர்க்க முடியாத நடிகர்களை உருவாக்கியவர் கே பாலச்சந்தர் அவர்கள் தான். அது மட்டுமல்லாமல் இவரால் பல நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் இன்று வரையிலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் பட்சத்தில் கிளி மூக்கு என்று அவமானப்படுத்தப்பட்டு இருந்த ஒரு நடிகரை சினிமாவில் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு இடத்திற்கு கொண்டு சேர்த்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் தான் இதை அந்த நடிகரை கூறி நேகிழ்ச்சி அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 1985 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்யாணம் அகதிகள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நாசர். அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லனாக கலக்கி கொண்டு இருக்கும் இவர் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நாசர் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார் அப்போது அவர் சொன்னது பலரையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது அதாவது ஆரம்பத்தில் நான் பள்ளியில் படிக்கும்போது கூட என்னை கிளி மூக்கு என்று தான் கூப்பிடுவார்கள்.
இதனால் எனக்கு நடிக்கும் எண்ணமே வரவில்லை ஆனால் தன்னுடைய அப்பா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார் ஆனால் என்னை பலரும் கிளிமூக்கு என்று கிண்டல் செய்ததால் சினிமா வாய்ப்பை தேடி நான் போகவில்லை. அந்த சமயத்தில் தான் இயக்குனர் கே பாலசந்தர் சார் எனக்கு உதவி செய்தார்.
அது மட்டுமல்லாமல் இன்றுவரையிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருவதற்கு முழுக்க முழுக்க கே பாலச்சந்தர் சார்தான் காரணம் என்று கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகர் நாசர். இவர் கூறிய அந்த சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.