தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் விஜய் இவர் நடித்து வரும் ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் திரைப்படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும் விஜய்யுடன் நடிக்க பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் போட்டி போடுகிறார்கள்.
கடைசியாக வெளியாகிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்கிய இருந்தார்கள் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து அசத்தி இருந்தார்.
இந்த நிலையில் விஜய் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நேற்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் தளபதி 65 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்தார்கள் அதுமட்டுமில்லாமல் நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாவது போஸ்டர் வெளியீட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்தார்கள்.
அப்படியிருக்கும் நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடிக்கொண்டே சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். அதேபோல்கடந்த வருடம் வெளியாகிய மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார் அந்த வீடியோ தாறுமாறாக வைரல் ஆனது.
கீர்த்தி சுரேஷ் 2017 ஆம் ஆண்டு பைரவா திரைப்படத்திலும் 2018 ஆம் ஆண்டு சர்க்கார் திரை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனால் தன்னை விஜய் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். அந்தவகையில் விஜயுடன் பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அமிர்தா ஐயர் இவர் மாஸ்டர் பாடல்களுக்கு குட்டையான கவுனை அணிந்து கொண்டு செம துள்ளலாக ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.