தமிழில் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது கடைசியாக பிக் பாஸ் சீசன் 5 நிறைவடைந்தது இதில் போட்டியாளராக பல கலை வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் இந்த ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்.
பாவணி ரெட்டி இவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார் ஆரம்பத்தில் பவானி ரெட்டி தெலுங்கு சீரியல் மூலம் அறிமுகமானவர் அப்போது தெலுங்கு சீரியல் நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.ஒரு கட்டத்தில் பவானியின் கணவர் பிரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
அந்த துயரத்திலிருந்து மீண்டு வர பாவணி மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். பின்பு நாம் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதால் ரசிகர்களை கவர ஆடையில் அளவை குறைத்துக்கொண்டு கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் பின்பு ஒரு கட்டத்தில் பாவணி பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக அமீர் கலந்து கொண்டார். அமீர் பாவணியின் வாழ்க்கையில் நடந்தவற்றை அனைத்தையும் தெரிந்துகொண்டு பாவணியை காதலிப்பதாக கூறியிருந்தார் ஆனால் பாவணி அதனை மறுத்து விட்டார். பின்பு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நடனமாடி அசத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பாவணி அமீரை காதலிக்க தொடங்கி உள்ளாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் பவாணி சமூக வலைதளப் பக்கத்தில் அவரது ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” humans glow differently when they are treated right and loved properly #feeling loved #happy me”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாவணி காதலை உணர்கிறேன் என குறிப்பிட்டு இருப்பதால் அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்கிறார் என தெரியவருகிறது. மேலும் அமீர் மற்றும் பவாணி இருக்கும் புகைப்படத்திற்கு mine எனக் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.