விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இரட்டைவால் குருவி, தவணை முறை வாழ்க்கை, சின்னத்தம்பி உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகை பாவனி. இவருக்கு சின்னத்தம்பி சீரியல் தான் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 5வது நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் இந்நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார் பிக்பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் வையில்டு கார்டு என்ரியாக அமீர் நுழைந்தார்.
அவரும் பாவனியை காதலிப்பதாக கூறிய நிலையில் இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றனர். இந்த நிகழ்ச்சியின் முழுவதும் பலமுறை அமிர் தன்னுடைய காதலை வெளிப்படுத்த ஒரு கட்டத்தில் அமிரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். எனவே ஏராளமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த வகையில் தற்போது இந்த ஜோடி க்யூட் ஜோடி ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தனர்.
அப்பொழுது நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே அவரின் அன்பு, பாசத்தை பார்த்து காதலிக்க தொடங்கி விட்டேன் நாங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம் ஆனால் அதற்கு இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று கூறியுள்ளனர் அது மட்டுமல்லாமல் பாவணி தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்திற்கு அழகான காதல் பாடல் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.