பல கோடி கொடுத்து லண்டனில் உள்ள மாளிகையை வாங்கிய அம்பானி- புகைபடத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட மக்கள்.

ambani
ambani

சாதனை படைக்கும் ஒவ்வொருவரையும் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்திய அளவில் நம்பர் ஒன் கோடீஸ்வரராக வலம் வருபவர் முகேஷ் அம்பானி. இவரது அப்பாவும்  செல்வந்தராக இருந்தாலும் அந்த செல்வங்களை மென்மேலும் அதிகரிக்கும் வகையில் சிறப்பான செயல்பாடுகளை செய்து வருகிறார் முகேஷ் அம்பானி

தற்போது பல கோடிக்கு சொந்தக்காரரான இவர் அதிக கம்பெனிகளை தக்கவைத்து கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய இடங்களிலும் தனது நிறுவனத்தின் பெயரை நிலை நாட்டுகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் மும்பையில் மிகப்பெரிய அளவில் மாடி வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார்.

அந்த வீட்டின் விலை சுமார் 300 கோடிக்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீட்டில் எல்லாமே இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நிலையில் முகேஷ் அம்பானி பிரிட்டனில் ஒரு சொகுசு மாளிகை ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இதனால் அம்பானி தனது குடும்பத்துடன் இனி அங்கேயே செட்டில் ஆகிவிடுவார் என தகவல் எழுந்தன. இச்செய்தி குறித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியது : ஸ்டோன் பார் பங்களாவை முதன்மையான கோல்ப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மாற்ற உள்ளதாகவும் இவை அனைத்தும் லண்டன் நிர்வாகத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

அம்பானி தனது குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆவார் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அவர் அங்கு குடியேற வில்லையாம் இந்தியாவிலேயே தான் தனது குடும்பத்துடன் வசிக்க போகிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. ஆனால் இவர் தற்போது வாங்கி உள்ள மாளிகையின் புகைப்படத்தை பார்த்து பலரும் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

ambani - new buliding
ambani – new buliding