தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது படத்தை சேவியர் பிரிட்டோ லலித் குமார் தயாரித்துள்ளார், மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக வேண்டிய திரைப்படம் ஆனால் ஊரடங்கு காரணத்தால் திரையரங்கு மூடப்பட்டது அதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
படத்தை எப்பொழுது அடுத்த ரிலீஸ் செய்யலாமா என படக்குழு ஒரு முடிவுக்கு வர முடியாமல் சிக்கித் தவித்து வருகிறது, ஒருவழியாக மாஸ்டர் படக்குழு வருகின்ற தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது, அதேபோல் இந்த வருடத்தின் மொத்த பட வேலையும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி ரிலீசாகமல் இருக்கும் ஒரே ஒரு பெரிய நடிகரின் படம் இதுதான்.
ஏற்கனவே ஊரடங்கு காரணமாக மக்கள் பொழுதுபோக்கிற்காக OTT யில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருக்கிறது. இந்த நிலையில் மாஸ்டர் குழுவிடம் அமேசான் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது, இந்த திரைப்படத்திற்கு 150 முதல் 175 கோடி வரை விலை வைத்து கூறியுள்ளார்களாம்.
ஆனால் இந்த மாஸ்டர் திரைப்படத்தின் தியேட்டர் பிஸினஸ் மட்டுமே 200 கோடியை தாண்டியது அனைவருக்கும் தெரிந்ததுதன் இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு 225 கோடி வரை விலை கேட்டு வருகிறார்கள் அதற்கு காரணம் இன்னும் ஆறு மாத காலத்திற்கு திரையரங்கிற்கு பெரிதாக ரசிகர் கூட்டம் வராது என்பதுதான் உண்மை.
அதனால் அடுத்த கட்ட வேலையை தொடங்கியுள்ளது மாஸ்டர் படக்குழு அதுமட்டுமில்லாமல் வினியோகஸ்தர் கொடுக்கும் குடைச்சளால் படத்தை அமேசானுக்கு விற்றுவிடலாம் என யோசனை செய்து வருகிறார்களாம், இதனை பிரபல இணையதள பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியிருந்தாலும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் விஜய் கூறியது படத்தை திரையரங்கில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்னுடைய ரசிகர்களுக்காக மட்டுமே நான் நடிக்கிறேன் அவர்கள் கொண்டாடவேண்டும் என முன்பு கூறியிருந்தார்.
ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் படம் இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் OTT யில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு தொடங்கிவிட்டது.