இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் இணையதளத்தில் தான் வெளியாகி வருகிறது.அதிலும் குறிப்பாக பாதி படங்கள் அமேசான் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு உத்தரவிட்ட பொழுது திரையரங்குகளை திறந்தால் 10 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள் அதுவும் முக்கியமான நடிகர்களில் படம் வெளியானால் மட்டுமே வருகிறார்கள் என பல திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதை நாம் பார்த்தோம்.
இதைப்பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அமேசான் நிறுவனம் மட்டுமே திரையரங்குகளை அதிகமாக வாடகைக்கு எடுத்து குடோன்களாக மாற்றி வருகிறார்கள் திரையரங்கில் திரைப்படங்கள் வெளியிட்டால் எவ்வளவு வருமானம் வருகிறதோ அதை விட இரண்டு மடங்கு தருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
இதைப்பற்றி திரையரங்கு உரிமையாளர் மற்றும் சங்க தலைவர் இதே நிலைமை நீடித்தால் திரையரங்குகளை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றி விடும்.
இதனால் சினிமா தொழிலுக்கும் மாஸாக இருக்கும் நடிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு வந்துவிடும் என கூறியிரக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திரையரங்குகளில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானால் அதில் வரும் வருமானத்தை விட பல மடங்கு தருவதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பேசி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லா திரையரங்குகளையும் கைப்பற்றி விட்டால் அப்போது தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் பற்றி பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும் அதுக்கு அப்புறம் ஒன்றும் பண்ண முடியாது உரிமையாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென தயாரிப்பாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக அவர் உரிமையாளர்கள் சங்க தலைவராக இதை கூறவில்லை ஒரு சினிமா ரசிகனாக கூறுகிறேன் என கூறியுள்ளார்.