விஜய்,சூர்யா படத்துக்கு விலை பேசிய அமேசான்.! எத்தனைகோடிக்கு தெரியுமா.? விவரம் இதோ.

master
master

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது என்பது நாம் அறிந்ததே. அதே போல இந்தியாவிலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் பள்ளி, கல்லூரி, வளாகங்கள், திரையரங்குகள் போன்ற பலவும் மூடப்பட்டுள்ளன.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். சமீபத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர இருந்த நிலையில் கொரோனா காரணமாக படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT வழியாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா படங்களான மாஸ்டர் மட்டும் சூரரைப்போற்று படங்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாஸ்டர்க்கு 130 கோடியும் சூரரைப் போற்றுக்கு 50 கோடியும் பேசப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது.

ஆனால் சூர்யா எதிர்பார்த்த தொகை அமேசன் கூறவில்லை. இதனால் அதற்கு நோ சொல்லி உள்ளா.ர் அதேபோல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களும் ஆன்லைனில் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் படம் வெளியிட்டால் தமிழ் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படம் அமேசான் பிரைம் வீடியோ வில் வெளியாக உள்ளது. இதனால் சூர்யா மற்றும் கார்த்தி படங்கள் திரையரங்குகளில் வெளியிட முடியாது என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.