உண்மையை கூறி பார்த்திபனை கிடுகிடுங்க வைத்த அமேசன் ப்ரைம்.!

parthiban
parthiban

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என்ன பன்முகத்தன்மை கொண்டு விளங்கி வருபவர் நடிகர் பார்த்திபன் இவர் தானே இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல். இந்த படம் குறித்த இயக்குனர் பார்த்திபன் தொடர்ந்து பொய்யான தகவலை பகிர்ந்து வருகிறார் என அமேசான் பிரைம் ott தளத்தில் தற்போது குறிப்பிட்டுள்ளது.

பார்த்திபன் எழுதிய நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பிரியங்கா ருத் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்து உள்ளார்.

இந்த படம் வெளியாகிய போது பல விமர்சனங்கள் இருந்த நிலையில் இதற்கு அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வந்த நடிகர் பார்த்திபன் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் என்ன செய்வதென்று திணறி போயிருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ஆ***ரி நடித்த பார்வதி நாயரையும் சில பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்தார்கள். இப்படி விமர்சனத்தாலே ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிய இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.

அது மட்டுமல்லாமல் இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்த படம் உருவாகியுள்ளதாக படகுழுவால் சொல்லப்பட்டது 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகர் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகளை உருவாக்கப்பட்டன அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும் நேர்மறை எதிர்மறை விமர்சனங்களும் இருந்தது.

இரவு நிழல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் ஓடிடி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை  இதனிடையே நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இன்று அமேசான் பிரைம் வீடியோவில் இரவு நிழல் திரைப்படம் வெளியானது இந்த நிலையை தற்போது அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் இரவின் நிழல் படத்தை கிளிக் செய்து ஓபன் செய்தால் படத்தின் தொடக்கத்தில் ட்ரிவியா என்ற தகவல் பிரிவில் உண்மை என்னவென்றால் இது உலகத்தின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்றும் இயக்குனர் பார்த்திபன் தவறான தகவலை பரப்பி வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.