பல கோடி கொடுத்து சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.! உற்சாகத்தில் படக்குழு.

மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்த திரைப்படத்தில் தொடர்ந்து முழு வீச்சில் நடித்து வருகிறார் முதலாவதாக கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

கௌதம் மேனனும், சிம்புவும் மூன்றாவது முறையாக இந்தப் படத்திற்காக கூட்டணி அமைத்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்திற்காக பிரம்மாண்ட இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

மிக பிரமாண்ட பொருட்செலவில் ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்தது.

தற்போது போஸ்ட் பிரமோஷன் மற்றும் பிசினஸ் வேட்டைகள் ஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படத்தின் பிசினஸ் போய்க்கொண்டிருக்கிறது. வெந்து தணிந்தது காடு வெளி படம் வெளியான பிறகு டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 15 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெந்து தனிந்தது காடு படத்தின் சாட்டிலைட் உரிமையைகாக்க தற்போது கடும் போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்புவை மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் ஆம் இப்பொழுது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக சுமார் 25 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.இருப்பினும் சிம்புவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment